செய்தி

யாழ் – சாவகச்சேரி வைத்தியசாலையில் ஏற்பட்ட குழப்பநிலை – வெளியான முழுமையான தகவல்

சாவகச்சேரி வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகரை இரவோடு இரவாக அங்கிருந்து அகற்றுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டதால் பாரிய குழப்பமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதில் மருத்துவ அத்தியட்சகராகத் கடமையாற்றும் இராமநாதன் அர்ச்சுனாவை அங்கிருந்து இடமாற்றம் செய்ய உத்தரவிடும் சுகாதார அமைச்சகத்தின் கடிதம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.

வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரண இரவு 7 மணியளவில் குறித்த கடிதத்தை பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் வழங்க முற்பட்டார்.

இதன் போது அதனை ஏற்க மறுத்துள்ள வைத்திய அத்தியட்சகர், இது அலுவலக நேரம் அல்ல என தெரிவித்துள்ளார்.

இதேவேளை வைத்தியசாலை பதில் அத்தியட்சகரை கைது செய்யும் வகையில் வைத்தியசாலையில் சாவகச்சேரி பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை தான் மட்டுமே வைத்தியசாலையில் கடமையில் நிற்பதால் தன்னை கைது செய்து அழைத்துச் சென்றால், அந்த சமயத்தில் வைத்தியசாலையில் எதாவது உயிரிழப்பு ஏற்பட்டால் தானே பொறுப்பு என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை வட மாகாணத்தின் யாழ் மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட வைத்திய அத்திட்சகாரினால் அங்கு கடமையாற்றும் வைத்தியர்களின் பாதுகாப்பிற்கு ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தலுக்கு எதிராகவும, அவருடைய தாபன விதி கோவைகளுக்கு எதிரான நடைமுறைகளுக்கு எதிராகவும், அவரின் அப்பட்டமான விதிமுறை மீறல்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க தவறியமைக்காகவும, பாதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை வைத்தியர்களுக்கு சார்பாகவும வட மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலை வைத்தியர்களும் ஒரு நாள் பனிப் புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளனர்.

எனவே இதன் பிரகாரம் இன்று காலை 8 மணியிலிருந்து. மறுநாள் காலை 8:00 மணி வரை வைத்தியர்கள் உயிர் காக்கும் அவசர சிகிச்சைகளில் மாத்திரமே ஈடுபடுவர் எனஅரசவைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!