மத்திய கிழக்கில் மோதல்கள் – இலங்கை ஊழியர்களின் நிலை தொடர்பில் அமைச்சரின் தகவல்
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் குறித்து தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கருத்து தெரிவித்துள்ளார்.
“மத்திய கிழக்கில் மோதல்கள் உருவாகினால் வெளிநாட்டு ஊழியர்களை இலங்கைக்கு அழைத்து வர வேண்டியிருக்கும்.
டொலர் பிரச்சனை இருக்கிறது. இது ஒரு நெருக்கடியாக நம் நாட்டை பாதிக்கிறது. முரண்பாடுகள் உருவாகும் பட்சத்தில் அனைத்து இலங்கையர்களும் அழைத்து வர தயாராக உள்ளனர். அதற்காக ஏற்கனவே 05 மில்லியன் டொலர்களுக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது.
அவர்களை இலங்கைக்கு அழைத்து வரும் வரை பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அவர்களை கடல் மற்றும் தரை மார்க்கமாக கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விரைவில் தயார் செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
அதற்கென தனியான குழுவொன்றையும் ஜனாதிபதி நியமித்துள்ளார்.
இந்த நேரத்தில் பதற்றமடைய வேண்டாம் என்று வெளிநாட்டு பணியாளர்களை நாங்கள் கூறுகிறோம், பாதுகாப்பாக வேலை செய்யுங்கள்
மேலும், மத்திய கிழக்கில் இப்படி ஒரு மோதல் ஏற்பட்டால், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தில் நம் நாட்டில் இன்னொரு நெருக்கடியும் வரலாம். அதனால் போர் ஏற்பட கூடாதென கடவுளை வேண்டிக்கொள்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.