மத்திய சூடானில் இரு குழுவினருக்கு இடையே மோதல் : 38 பேர் பலி!
மத்திய தெற்கு சூடானில் உள்ள சதுப்பு நிலப் பகுதியில் வசிப்பவர்கள், வறண்ட காலங்களில் தண்ணீர் மற்றும் மேய்ச்சல் நிலத்தைத் தேடிச் செல்லும் நிலையில் அங்கு கால்நடை மேய்ப்பவர்களுடன் சண்டை இட்டுள்ளனர்.
குறித்த மோதலில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன். 52 பேர் துப்பாக்கிச்சூட்டு காயங்களுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது.
வார்ராப் மாநிலத்தின் தகவல் மந்திரி வில்லியம் வோல் மயோம், லேக்ஸ் மாநிலத்தில் உள்ள அலோர் பகுதியில் சண்டை நடந்ததாகக் கூறினார்.
நிலைமையை அமைதிப்படுத்தவும், சர்ச்சைக்குரிய ஈர நிலங்களில் இருந்து கால்நடைகளை மேய்ப்பவர்களை நகர்த்தவும் பாதுகாப்புப் படைகள் அனுப்பப்பட்டுள்ளதாக மயோம் தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களில் 19 பேர் மற்றும் காயமடைந்தவர்களில் 17 பேர் வார்ராப் மாநிலத்தைச் சேர்ந்த பொதுமக்கள் என்றும், 35 பேர் லேக்ஸ் மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.