தம்பலகாமத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்த நடத்துனர் பலி!
திருகோணமலை- தம்பலகாமம், பாலம்பட்டாறு பகுதியில் பேருந்து நடத்துனர் பேருந்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (20) காலை இடம் பெற்றுள்ளது.
சம்பவத்தில் திருகோணமலை 05ம் கட்டை பகுதியில் வசித்து வரும் லலித்குமார் (43வயது) என்பவர் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, திருகோணமலையிலிருந்து கந்தளாய் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தின் நடத்துனர் பாலம்பட்டாறு பகுதியிலுள்ள கோயில் உண்டியலுக்கு காசி போடுவதற்காக பேருந்தில் இருந்து இறங்கி மீண்டும் ஏறுவதற்கு முற்பட்டபோது தவறி விழுந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து தம்பலகாமம் பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ் விபத்து தொடர்பில் தம்பலகாமம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் பேருந்தின் சாரதியை கைது செய்துள்ளனர்.




