இலங்கை மக்களுக்கு கணினி அவசர தயார்நிலை குழு விடுத்த எச்சரிக்கை

இலங்கை முழுவதும் இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (CERT) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த விடயம் குறித்து பொதுமக்கள் கவனத்துடன் செயற்பட வேண்டும் என இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு அறிவுறுத்தியுள்ளது.
2025ஆம் ஆண்டில் மாத்திரம் 5400க்கும் மேற்பட்ட இணையக் குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. எக்காரணம் கொண்டும் கடவுச்சொற்களைப் பகிர வேண்டாம் என இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.
மேலும் சமூக ஊடகங்களைத் தனிப்பட்டதாக வைத்திருக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.
தெரியாத இணைப்புகளை அழுத்தி உட்செல்ல வேண்டாம் எனவும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (CERT) குறிப்பிட்டுள்ளது.
(Visited 3 times, 3 visits today)