இலங்கை

IMF உடனான பேச்சுவார்த்தை நிறைவு : 02ஆம் கட்ட கடனை பெறுவதில் சிக்கல்!

இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு இடையிலான இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ள நிலையில், இது குறித்து ஐ.எம்.எஃப் பிரதிநிதிகள் இன்று (27.09) சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது   தூதுக்குழுவின் தலைவர்  பீட்டர் ப்ரூவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார். அப்போது பேசிய அவர்,  நாட்டின் பொருளாதாரம் சில சாதகமான அம்சங்களைக் காட்டினாலும், மற்ற துறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவலியுறுத்தினார்.

குறிப்பாக வரி அறவீடு முறைமையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் பிரதிநிதிகள் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தனர்.

“விரைவில் ஊழியர்கள் அளவிலான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு குழு முதல் பரிசீலனையின் கீழ் மேலும் விவாதங்களை நடத்தி வருவதாகவம், , இந்த கடினமான நேரத்தில் இலங்கைக்கு உதவ நாங்கள் விரும்புகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

பணியாளர் அளவிலான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு எங்களுக்கு இன்னும் சிறிது கால அவகாசம் தேவை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆகவே இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்குவதாக கூறிய 2.9 பில்லியன் டொலர் கடனின் இரண்டாம் பாகத்தை பெறுவதில் காலதாமதம் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!