வட அமெரிக்கா

இந்திய நிறுவனம் ஒன்றின் தயாரிப்புகள் மீது கனடா மற்றும் அமெரிக்காவில் எழுந்துள்ள புகார்கள்

இந்திய நிறுவனம் ஒன்றின் துணை நிறுவனங்கள் மீது, அவற்றின் சில தயாரிப்புகள் புற்றுநோய்க்கு காரணமாக அமைவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்திய நிறுவனமான டாபர் நிறுவனத்தின் கூந்தலை நேராக்க உதவும் தயாரிப்புகள் சிலவற்றிலுள்ள ரசாயனங்கள், புற்றுநோயை உருவாக்குவதாக கனடா மற்றும் அமெரிக்காவில் புகார்கள் எழுந்துள்ளன.

பிரச்சினைக்குள்ளாகியுள்ள டாபர் நிறுவனத்தின் துணை நிறுவனங்கள், Namaste Laboratories LLC (Namaste), Dermoviva Skin Essentials Inc. (Dermoviva) மற்றும் Dabur International Ltd. (DINTL) ஆகிய நிறுவனங்கள் ஆகும்.

Dabur subsidiaries sued in US, Canada over allegations of its products  causing cancer - BusinessToday

கனடா மற்றும் அமெரிக்காவில், டாபர் நிறுவனத்தின் குறிப்பிட்ட தயாரிப்புகளை பயன்படுத்தியோர், சூலகப் புற்று (ovarian cancer) மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கு (uterine cancer) ஆளாகியுள்ளதாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.இந்த தயாரிப்புகளுக்கு எதிராக சுமார் 5,400 வழக்குகள் பதிவாகியுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்குவதாக அமைந்துள்ளது.

இந்த தயாரிப்புகளில், சுருள் கூந்தலை நேராக்குவதற்காக methylene glycol என்னும் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறதாம். இந்த மெத்திலீன் கிளைக்கால், பார்மால்டிஹைடு என்னும் ரசாயனத்தை வெளியிடக்கூடியது. இந்த ஃபார்மால்டிஹைடு மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாக்கக்கூடிய ரசாயனம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content