இலங்கை செய்தி

வடக்கு ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக FCID இல் முறைப்பாடு!

வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் FCID, வேலணை பிரதேச சபை உறுப்பினர் முறைப்பாடு செய்துள்ளார்.

வேலணையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் நோக்குடன் 2016ஆம் ஆண்டு மண்டைதீவில் 77 மில்லியன் ரூபா நிதியில் “எக்கோ ரூரிசம்” திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

உரிய முறையிலான திட்டமிடல் இல்லாமை உள்ளிட்ட பல காரணங்களால் அந்த திட்டம் தோல்வியடைந்தது.

அத்துடன் 50 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் பாவனை இன்றி அழிந்து போயுள்ளன என குறித்த திட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் மேற்படி திட்டத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன எனவும் , அரச நிதி வீண் விரயம் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதற்கு அப்போதைய யாழ் . மாவட்ட செயலர் நா.வேதநாயகன் ( தற்போதைய வடமாகாண ஆளுநர்) , திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட கால பகுதியில் வேலணை பிரதேச செயலர்களாக கடமையாற்றிய தெ.சுகுணரதி மற்றும் ஆ. சோதிநாதன் ஆகிய மூவரும் பொறுப்பு எனக்கூறியே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!