கொடி ஏற்றுவதில் போட்டி ; இந்தியாவுக்கு போட்டியாக 500 அடி உயரத்திற்கு தேசிய கொடி நிறுவவுள்ள பாகிஸ்தான்
ஆகஸ்ட் 15ம் திகதி சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் பிரமாண்டமான கொண்டாட்டங்கள் மற்றும் ஆடம்பரமானநிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கும். இந்தியாவின் சுதந்திர தின விழாவை உலகம் முழுவதும் திரும்பி பார்க்கும் . இந்தநிலையில் பாகிஸ்தான் தற்போது நாட்டில் நிலவும் கடனைப் பொருட்படுத்தாமல், அதன் சுதந்திர தின கொண்டாட்டத்திலும் இந்தியாவுடன் போட்டிப்போட முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நாளில் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றன. ஆனால் இந்தியாவிற்கு ஒரு நாள் முன்னதாக ஆகஸ்ட் 14ம் திகதி அன்று பாகிஸ்தானில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்தியாவை போன்றே பாகிஸ்தானும் இந்த ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாட சில ஆடம்பரமான திட்டங்களை தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன் கொண்டாட்டங்கள் மூலம் இந்தியாவுடன் போட்டிப்போட முயற்சிக்கும் பாகிஸ்தான், சுதந்திர தினத்தன்று 500 அடி உயரத்திற்கு தேசியக் கொடியை ஏற்றிவைக்க முடிவு செய்துள்ளது, அதன் மதிப்பு பாகிஸ்தான் மதிப்பில் ரூ.40 கோடி. இந்த கொடி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஆகஸ்ட் 14ம் திகதி அன்று லிபர்ட்டி சவுக்கில் ஏற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.