பாதிரியார்களால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்களுக்கு இழப்பீடு!
பாதிரியார்கள் அல்லது தேவாலயப் பிரதிநிதிகளால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நிதி இழப்பீடு பெற்றுள்ளதாக செயல்முறைக்கு பொறுப்பான ஒரு சுயாதீன அமைப்பு தெரிவித்துள்ளது.
அங்கீகாரம் மற்றும் இழப்பீடுக்கான சுதந்திர தேசிய ஆணையத்தின் வருடாந்திர அறிக்கை, 1,351 பாதிக்கப்பட்டவர்கள் குழந்தை பருவ அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கான முயற்சியில் இழப்பீடு கோரவும் உளவியல் ஆதரவைப் பெறவும் முன்வந்ததாக தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 66% ஆண்களும் 34 சதவீதமான பெண்களும் உள்ளடங்குவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை, பாதிக்கப்பட்ட 489 பேரின் இழப்பீட்டுக் கோரிக்கைகளுக்கு இழப்பீடு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அவர்களில் 88 பேருக்கு அதிகபட்சமாக 60,000 யூரோக்கள் ($65,000) வழங்கப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2023) மாத்திரம் கடந்த ஆண்டு, 358 பாதிக்கப்பட்டவர்களின் இழப்பீடு கோரிக்கைகள் அங்கீகரிக்கப்பட்டன, ஒவ்வொரு நபருக்கும் சராசரியாக 35,310 யூரோக்கள் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.