சிங்கப்பூரில் அனாதைகளுக்கு கருணை இல்லம் – அனைத்து சொத்தையும் விற்று நெகிழ வைத்த நபர்
சிங்கப்பூரில் அனாதைகளுக்காக தனது உடைமைகள் அனைத்தையும் விற்று உதவிய நபர் தொடர்பில் நெகிழ்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
84 வயதான தாமஸ் வீ என்ற நபரே இந்த நெகிழ்ச்சி செயலை செய்துள்ளார். பிலிப்பைன்ஸில் அமைந்துள்ள “வில்லிங் ஹார்ட்ஸ்” என்னும் அனாதை இல்லத்தின் நிறுவனராகியுள்ளது.
அவரிடம் வேலைபார்த்த முன்னாள் வெளிநாட்டு பணிப்பெண் ஒருவர் கேட்ட உதவி அவருக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்தது. மரியா தெரசா என்ற பணிப்பெண், தனது சொந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டி உணவு மற்றும் ஆடைகளை அவரிடம் கேட்டார், அப்போது தான் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற அவரின் உன்னத பயணம் தொடங்கியது.
உதவி தேவைப்படுவோர் குறித்து அதிகமாக அவர் கேட்கத் தொடங்கினார், அதன் பிறகு அவரது ஆர்வம் மேலும் அதிகமானது. எனவே வீயும் அவரது மனைவியும் தெரேசாவின் சொந்த ஊரான புலகானுக்கு தனிப்பட்ட முறையில் செல்ல முடிவு செய்தனர்.
இப்போது, நான்கு முதல் 12 வயதுக்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் அங்குள்ளனர், மேலும் அவர்களின் கல்விக்கு தேவையான நிதியுதவியையும் அவர் வழங்குகிறார்.