ஜப்பானில் 34 ஆண்டுகள் இல்லாத அளவு சம்பளத்தை அதிகரித்த நிறுவனங்கள்

ஜப்பானிய நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை இவ்வாண்டு சராசரியாக 5 சதவீதம் மேல் உயர்த்த இணங்கியுள்ளன.
சுமார் 34 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்படும் மிக அதிகமான சம்பள உயர்வாக அது இருக்கும் என்று கூறப்பட்டது.
ஊழியரணியுடன் நடைபெற்ற வருடாந்திரப் பேச்சுவார்த்தையில், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை முழுமையாகப் பூர்த்தி செய்துள்ளதாக ஜப்பானின் மிகப்பெரிய நிறுவனங்கள் கூறின.
பணவீக்கத்தால் அதிகரித்திருக்கும் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க, கணிசமான சம்பள உயர்வு முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
நலிவடைந்து வரும் யேன் நாணயத்தால், அதிக லாபம் ஈட்டியுள்ள நிறுவனங்கள், அதைக் கொண்டு ஊழியர்களை வேலையில் தக்க வைத்துக்கொள்ள விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டது.
(Visited 5 times, 5 visits today)