ஜெர்மனியில் விடுமுறை பெற்று வீடுகளில் முடங்கும் ஊழியர்களால் நெருக்கடியில் நிறுவனங்கள்
ஜெர்மனியில் ஊழியர்கள் சுகயீனம் காரணமாக அதிகளவான விடுமுறைகளை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கை ஒன்றின் மூலம் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வேலையிடங்களுக்கு செல்லாமல் பலர் சுகயீன விடுறையில் வீடுகளில் தங்கியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்வேறு நோய்களை குறிப்பிட்டு விடுமுறை பெறுவதாகவும் சிலர் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளதாகவும் விடுமுறைக்கான காரணமாக குறிப்பிட்டுள்ளனர்.
ஊழியர்களின் விடுமுறை அதிகரிப்பால் தொழில் வழங்குநர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஜனவரி தொடக்கம் டிசம்பர் மாதம் வரை தொழில் செய்யும் ஒருவர் சராசரியாக 17.7 நாட்கள் சுகயீனம் காரணமாக விடுமுறைகளை எடுப்பதாக தெரியவந்துள்ளது.
கடந்த 2023 மற்றும் 2020 ஆண்டுகளில் சராசரியாக வருடம் ஒன்றுக்கு 17.4 நாட்கள் விடுமுறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் 13.2 நாட்களாகவும், 2019 ஆண்டில் 14.1 நாட்களாக விடுமுறை பெற்றவர்களின் சராசரியாக காணப்பட்டுள்ளது.