சார்லி கொலை தொடர்பான கருத்து – ஏபிசி நிகழ்ச்சி நிறுத்தம் – டிரம்ப் பாராட்டு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு நெருங்கியவரான சார்லி கிர்க் கொலை தொடர்பான கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் டிஸ்னி நிறுவனத்தின் ஏபிசி நெட்வொர்க் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ஜிம்மி கிம்மல் இரவு நேர நேரலை பேச்சு நிகழ்ச்சியை காலவரையின்றி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க் கொலையில், குஏபிசி நெட்வொர்க்கின் ஜிம்மி கிம்மல் நிகழ்ச்சி நிறுத்தம்டியரசுக் கட்சியினர் அரசியல் ஆதாயம் தேடுவதற்கான அனைத்துவகையான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக ஜிம்மி கிம்மல் கருத்து தெரிவித்திருந்தார்.
கடந்த திங்கள்கிழமை நேரலை நிகழ்ச்சியில் அவர் தெரிவித்த இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் ஆட்சேபணை எழுந்த நிலையில், நேரலை நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏபிசி நெட்வொர்க்கின் இந்த முடிவுக்கு டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.