ஐரோப்பா

டேவிட் கேமரூன் வெளியிட்ட கருத்து ; பிரித்தானியாவுக்கு வெளிப்படையாக மிரட்டல் விடுத்த ரஷ்யா

பிரித்தானிய ஆயுதங்களை பயன்படுத்தி உக்ரைன் ரஷ்யா மீது தாக்குதல் முன்னெடுத்தால், பிரித்தானியா மீது தாக்குதல் உறுதி என ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளது.

ரஷ்யாவை தாக்குவதற்கு பிரித்தானிய ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரைனுக்கு உரிமை உண்டு என்று கடந்த வாரம் வெளிவிவகார அமைச்சர் டேவிட் கேமரூன் கூறிய நிலையிலேயே ரஷ்யா பதிலடி உறுதி என்று மிரட்டல் விடுத்துள்ளது.அத்துடன் இந்த விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு பிரித்தானிய தூதர் நைஜல் கேசியை ரஷ்ய வெளிவிவகார அமைச்சகத்திற்கு அழைக்கப்பட்டதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.

ஆனால் நைஜல் கேசி தொடர்பான ரஷ்யாவின் கருத்துக்கு பிரித்தானியா மறுப்பு தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிகாரிகளுடன் உத்தியோகப்பூர்வ சந்துப்பு மட்டுமே நைஜல் கேசி முன்னெடுத்துள்ளதாகவும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.இந்த நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுடன் தற்போது பிரித்தானியாவும் போரில் களமிறங்கியுள்ளதை டேவிட் கேமரூன் உறுதி செய்துள்ளார் என்றே ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

Russia warns Britain it could strike back after Cameron remark on Ukraine |  Reuters

மேலும், ரஷ்யாவுக்கு எதிராக பிரித்தானியாவின் தொலை தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தாது என்ற நிலைப்பாட்டுக்கு எதிராக பிரித்தானியா செயல்படுகிறது என்றும் ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.

ரஷ்ய பகுதிகளை பிரித்தானிய ஆயுதங்களால் உக்ரைன் தாக்கியது உறுதி செய்யப்பட்டால், கடும் விளைவுகளை பிரித்தானியா எதிர்கொள்ள நேரிடும் என்றும் நைஜல் கேசியை தொடர்புகொண்டு எச்சரித்துள்ளதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும், வெளிவிவகார அமைச்சர் டேவிட் கேமரூன் கூறிய கருத்துகள் இந்த போரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதாகவே கருதப்படும் என்றும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த வாரம் உக்ரைன் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் டேவிட் கேமரூன், ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளைத் தாக்க பிரித்தானியா வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரைனுக்கு உரிமை உண்டு என்றும், ஆனால் முடிவெடுக்க வேண்டியது உக்ரைன் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்