கொழும்பிலிருந்து நுவரெலியா சென்ற பேருந்து விபத்து – ஆபத்தான நிலையில் 5 பேர்
கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த பேருந்தொன்று இன்று அதிகாலை 4.30 அளவில் இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியில் வட்டவளை சிங்களக் கல்லூரிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
பேருந்து விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
மற்றுமொரு பேருந்தை முந்திச்செல்ல முற்பட்ட வேளையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த ஐந்து பேர் ஆபத்தான நிலையில் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த ஏனைய 12 பேர் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





