இலங்கை : வளர்ச்சி பாதையில் பயணிக்கும் கொழும்பு பங்குச் சந்தை!
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (29) 135.54 புள்ளிகளால் அதிகரித்தது.
அதன்படி, ASPI இன்று 12,745.60 புள்ளிகளில் நிறைவடைந்தது, இது பிப்ரவரி 03, 2022 முதல் அதன் அதிகபட்ச மதிப்பாகும்.
இதேவேளை, இன்றைய வர்த்தகம் ரூ. 3.96 பில்லியனாக பதிவாகியுள்ளது.





