கொழும்பு – ஜிந்துப்பிட்டியிலும் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு
கொழும்பு – ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த பகுதியில் உள்ள அழகு கலை நிலையமொன்றிற்குள் இந்த துப்பாக்கிப் பிரயோகம்
இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த நால்வர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




