பரபரப்பாகும் கொழும்பு அரசியல்!! ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு முக்கிய உத்தரவு
ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர் இது நடைபெறவுள்ளது.
ஆளும் கட்சியில் எழுந்துள்ள சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நலன்புரி அமைப்பு, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு மற்றும் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தால் நாட்டுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படும்.
இதேவேளை, புதிய அமைச்சு பதவி வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்டோரை புதிய அமைச்சர்களாக நியமிப்பது தொடர்பிலும் கருத்துப் பரிமாற்றம் நடைபெறவுள்ளது.
ஜூன் 28ஆம் திகதி தொடக்கம் ஜூலை 3ஆம் திகதி வரை ஆளும் கட்சி உறுப்பினர்களை கொழும்பில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக உள்ளுர் கடன் மறுசீரமைப்பு தொடர்பான நிதி ஒழுங்குமுறைகளை விரைவாக அங்கீகரிப்பதற்காக அடுத்த வாரம் அவசர நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமையே இதற்குக் காரணம்.
வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.