கொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!

கொழும்பு கோட்டைக்கும் – காங்கேசன் துறைக்கும் இடையிலான ரயில் சேவைகள் இன்று (15.07) உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
புதுப்பிக்கப்பட்ட தண்டவாளத்தில் மணிக்கு 100 கிமீ வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது. இந்த சோதனை ஓட்டத்தில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவும் கலந்து கொண்டார்.
அதன்படி இன்று காலை 5.45 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து புகையிரதப் பயணம் ஆரம்பிக்கப்பட்டு கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான இடைநிறுத்தப்பட்ட புகையிரத சேவைகள் உத்தியோகபூர்வமாக மீள ஆரம்பிக்கப்பட்டன.
(Visited 10 times, 1 visits today)