விளக்க கடிதத்தை இடைநிறுத்த உத்தரவு பிறப்பித்துள்ள கொழும்பு மாவட்ட நீதிமன்றம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகரவிடம் விளக்கம் கோரி கட்சியின் தலைவர் பிறப்பித்த தடை உத்தரவை இடைநிறுத்துமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (26) உத்தரவிட்டுள்ளது.
தயாசிறி ஜயசேகர சமர்ப்பித்த முறைப்பாட்டை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்த தடை உத்தரவை ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வரையில் அமுல்படுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், தயாசிறி ஜயசேகரவுக்கு அவ்வாறானதொரு கடிதத்தை வழங்குவதற்கு கட்சியின் மத்திய குழுவுக்கு அதிகாரம் உள்ளதாக மைத்திரிபால சிறிசேன சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
(Visited 20 times, 1 visits today)





