தென் அமெரிக்கா

காசா போர் காரணமாக இஸ்ரேல் உடன் உறவை முறித்து கொண்ட கொலம்பியா

இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான மோதல் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்கும்வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் கூறியுள்ளது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர், அப்பாவி பாலஸ்தீனர்கள் என 34,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ரஃபா நகரிலும் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டுடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அறிவித்துள்ளார்.

பெகோட்டாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர்கள் தினவிழாவில் பங்கேற்ற அதிபர் பெட்ரோ, இனப்படுகொலை செய்யும் அரசுடனான தூதரக ரீதியிலான உறவை முறித்துக் கொள்வதாக தெரிவித்தார். காசாவில் நடைபெறும் மனித உரிமை மீறலை உலகம் வேடிக்கை பார்க்காது. அனைத்து நாடுகளும் தீவிர நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்

(Visited 12 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு தென் அமெரிக்கா

3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சார்ந்த துறைகளில் கடல் போல வாய்ப்புகள்

மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக்ஸ் எனும் மாக்  (MAAC) கோவையில்  நவீன 3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து இளம் தலைமுறை மாணவ,மாணவிகளுக்குபயிற்சி அளித்து
தென் அமெரிக்கா

அவள் என் காதலி.. 800 வருடங்கள் பழமையான மம்மியோடு பொலிஸில் சிக்கிய 26 வயது இளைஞன்!

பெரு நாட்டில் 800 வருடப் பழமையான மம்மியை உணவு வழங்கப்பயன்படும் பையில் வைத்து, எடுத்துச் செல்லும் போது காவல்துறையிடம் நபர் ஒருவர் சிக்கியுள்ளார். பெரு நாட்டை சேர்ந்த