செய்தி தமிழ்நாடு

ரயில் மோதி கல்லூரி மாணவி பலி

செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைகழகத்தில் B.optom மூன்றாம் ஆண்டு படித்து வருபவர் மாணவி கிருத்திகா (20).

இவர் சென்னை, தாம்பரம் அருகே புதிய பெருங்களத்தூரை சேர்ந்தவர்.இவர் வழக்கம் போல் கல்லூரி முடிந்த நிலையில் மாலை வீடு திரும்ப பொத்தேரி ரயில் நிலையம் வந்துள்ளார்.

அப்போது சென்னை, எழுப்பூரில் இருந்து தாம்பரம் வழியாக காரைக்குடி செல்லும் விரைவு ரயில் கல்லூரி மாணவி கிருத்திகா மீது மோதியதில் மாணவி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் ரயில்வே போலீசார் உயிரிழந்த கல்லூரி மாணவி கிருத்திகாவின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை,குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல் கட்ட விசாரணையில் தனியார் கல்லூரி மாணவி கிருத்திகா பொத்தேரி ரயில் நிலையத்தில் தண்டவாளம் கடந்து சென்று நடைமேடையில் செல்போன் பேசிக்கொண்டிருந்த போது விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிய வந்துள்ளது.

எப்போதும் கல்லூரி மாணவ- மாணவியர்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் பொத்தேரி ரயில் நிலையத்தில் விரைவு ரயில் மோதி கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 8 times, 1 visits today)

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி