ஐரோப்பா

துருக்கியின் மத்திய பகுதியில் இடிந்து விழுந்த குடியிருப்பு கட்டடம் – இருவரை மீட்க போராடும் குழுவினர்!

துருக்கியின் மத்திய பகுதியில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இருவர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மூவர் மீட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த இருவரையும் மீட்க மீட்பு படையினர் போராடி வருகின்றனர்.

தலைநகர் அங்காராவிலிருந்து சுமார் 260 கிலோமீட்டர் (160 மைல்) தெற்கே உள்ள கோன்யா நகரில் உள்ள நான்கு மாடி அடுக்குமாடி குடியிருபே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்க்பபடுகிறது.

கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றும் இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் எனவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஹோட்டல் தீ விபத்தில் 78 பேர் இறந்ததைத் தொடர்ந்து கட்டிடப் பாதுகாப்பில் மீண்டும் கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த இடிபாடு ஏற்பட்டுள்ளது.

 

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்