நியூயார்க் நகரில் இடிந்து விழுந்த கட்டடம் – மக்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை!
நியூயார்க்கின் பிராங்க்ஸ் பெருநகரத்தில் உயரமான கட்டடம் ஒன்று இன்று (01.10) பகுதியளவில் இடிந்து விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எரிவாயு வெடிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து கட்டடம் இடிந்து விழுந்ததாக நியூயார்க் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இதன்காரணமாக யாரும் உயிரிழந்ததாகவோ, அல்லது காயமடைந்ததாகவோ குறிப்பிடப்படவில்லை.
நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ், நிலைமையை அறிந்திருப்பதாகவும், கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த பகுதியில் பயணிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.





