ஜேர்மனியில் இடிந்து விழுந்த பாலம் : போக்குவரத்து பாதிப்பு!
கிழக்கு ஜேர்மனியில் கான்கிரீட் பாலம் பகுதியளவில் இடிந்து விழுந்தது ஏன் என்பது குறித்து விசாரணை தொடங்கியுள்ளது.
கரோலா பாலத்தின் ஒரு பகுதி டிரெஸ்டனில் உள்ள எல்பே ஆற்றில் இடிந்து விழுந்துள்ளது. இருப்பினும் அதிர்ஷவடவசமாக யாரும் காயமடையவில்லை என தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த பாலம் இடிந்து விழுந்தமையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
(Visited 2 times, 1 visits today)