தென் அமெரிக்கா

பிரேசிலில் இடிந்து விழுந்த பாலம்; ஆற்றில் விழுந்த அமிலம் ஏந்திய லொரி , ஒருவர் பலி

பிரேசிலில் உள்ள இரு மாநிலங்களை இணைக்கும் பாலம் ஒன்று டிசம்பர் 22ஆம் திகதி இடிந்து விழுந்தது.அப்போது அப்பாலத்தில் வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன.

அமிலம் ஏந்திய லொரி ஒன்று ஆற்றில் விழுந்ததில் ஆற்றில் சல்ஃபரிக் அமிலம் கசிந்ததாக அதிகாரிகள் கூறினர்.

இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும் மற்றொருவர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.இத்தகவல்களைப் பிரேசிலியத் தீயணைப்புப் படை வெளியிட்டது.

சம்பவம் நிகழ்வதற்கு சில வினாடிகள் முன்பு பாலத்தின் ஓரத்தில் இருந்த பிளவைக் காட்டி அதை உடனடியாகச் சரிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுக்கொண்டிருந்தார் இலாயஸ் ஜூனியர்.இதையெல்லாம் அவர் காணொளி எடுத்துக்கொண்டிருந்தபோது பாலம் இடிந்து விழுந்தது.அவர் அங்கிருந்து தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த காணொளியின் நம்பகத்தன்மையை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை.

இதுகுறித்து நகரமன்ற அதிகாரியான ஜூனியர் உடனடியாகக் கருத்துரைக்கவில்லை.

சம்பவத்தில் குறைந்தது 11 பேர் பாதிப்படைந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

50 மீட்டருக்கும் அதிகமான ஆழம் கொண்ட அந்த ஆற்றில் இரண்டு லாரிகள், ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை விழுந்தன.

(Visited 28 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு தென் அமெரிக்கா

3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சார்ந்த துறைகளில் கடல் போல வாய்ப்புகள்

மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக்ஸ் எனும் மாக்  (MAAC) கோவையில்  நவீன 3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து இளம் தலைமுறை மாணவ,மாணவிகளுக்குபயிற்சி அளித்து
தென் அமெரிக்கா

அவள் என் காதலி.. 800 வருடங்கள் பழமையான மம்மியோடு பொலிஸில் சிக்கிய 26 வயது இளைஞன்!

பெரு நாட்டில் 800 வருடப் பழமையான மம்மியை உணவு வழங்கப்பயன்படும் பையில் வைத்து, எடுத்துச் செல்லும் போது காவல்துறையிடம் நபர் ஒருவர் சிக்கியுள்ளார். பெரு நாட்டை சேர்ந்த
error: Content is protected !!