அமெரிக்காவில் குளிரான வானிலை – விமான சேவைகள் பாதிப்பு!
அமெரிக்காவில் குளிர்கால வானிலை காரணமாக முக்கிய விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்திற்கு நேற்றில் இருந்து இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நியூயார்க்கின் முக்கிய விமான நிலையங்களிலும், பிலடெல்பியா (Philadelphia) சர்வதேச விமான நிலையத்திலும் தரைவழி நிறுத்தங்கள் செயல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
JFKவிற்கு வருகை தந்த 1000இற்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதங்களை சந்தித்ததாக கூறப்படுகிறது.
அதேபோல் பிலடெல்பியா சர்வதேச விமான நிலையம் 700க்கும் மேற்பட்ட விமான தாமதங்களை சந்தித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையமும் கணிசமான தரைவழி தாமதங்களை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





