அமெரிக்காவில் குளிரான வானிலை – 170 மில்லியன் மக்கள் பாதிப்பு!
அமெரிக்காவின் பெரும்பகுதியில் சராசரிக்கும் குறைவான வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் 170 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துருவ சுழல் ஏற்படுவதால் மத்திய மற்றும் கிழக்கு அமெரிக்க மாநிலங்கள் பாதிக்கப்படும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
பொதுவாக, துருவ சுழல் ஆர்க்டிக்கில் வலுவாக இருக்கும் என்பதோடு குளிரான காற்று வீசக்கூடும். இதன் நிமித்தம் அதிக குளிரான வானிலை நிலவுகிறது.
இந்த முறை 10-14 நாட்கள் அல்லது அதற்கு மேல் குளிரான வானிலை தொடரும் எனவும், பிப்ரவரி தொடக்கத்தில் கூட இந்த வானிலையே நிலவக்கூடும் எனவும் அதிகாரிகள் எதிர்வுக்கூறியுள்ளனர்.





