அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் சிதறி கிடந்த 800,000 டொலர் மதிப்புள்ள நாணயங்கள்

அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லொரியிலிருந்து 800,000 டொலர் மதிப்புள்ள நாணயங்கள் வீதியில் சிதறியுள்ளது.
சம்பவம் நேற்று முன்தினம் அமெரிக்காவின் டெக்சஸ் (Texas) மாநிலம், அல்வோர்ட் (Alvord) பகுதியில் நடந்தது.
விபத்தில் ஓட்டுநரும் பயணியும் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். நாணயங்களை அப்புறப்படுத்த நெடுஞ்சாலையின் சில தடங்கள் மூடப்பட்டன.
காலை 5.30 மணி முதல் ஊழியர்கள் நாணயங்களை அகற்ற பெரும்பாடுபட்டனர். மாலை 7 மணிக்குப் பிறகு நெடுஞ்சாலை முழுவதுமாகத் திறக்கப்பட்டது.
சம்பவம் குறித்து அமெரிக்க நாணயச் சாலை கருத்துத் தெரிவிக்கவில்லை.
(Visited 7 times, 7 visits today)