இலங்கையில் தேங்காய்களுக்கு கடும் தட்டுப்பாடு : சில உணவுகளை விற்பனை செய்வது நிறுத்தம்!
சந்தையில் தேங்காய்களின் அதிக விலை காரணமாக நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான இடங்களில் உள்ள கேன்டீன்களில் தேங்காய் சம்போல் மற்றும் கிரி ஹோடி (தேங்காய் பாலில் செய்யப்பட்ட குழம்பு) வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக ஹர்ஷன ருக்ஷன் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை நடத்துவோர் சங்கத்தின் தலைவர் தேங்காயின் விலை 200ஐ எட்டியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அரிசி, முட்டை, உப்பு, தேங்காய் ஆகியவற்றின் விலை உயர்வினால் உணவுப் பொருட்களின் விலை 30 வீதத்தால் கேன்டீன்களில் அதிகரிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
(Visited 6 times, 1 visits today)