இலங்கை: தேங்காய் பறிக்க சென்றவர்க்கு குரங்கினால் வந்த விபரீதம்: பறிபோன உயிர்
குரங்கு வீசிய தேங்காய் தலையில் விழுந்ததில் பலத்த காயங்களுக்கு உள்ளான ஒருவர் கேகாலை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
புலத்கொஹுபிட்டிய தோட்டத்தில் வசிக்கும் ஜயசேன (81வயது) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
தேங்காயை பறிக்க முற்பட்ட போது தேங்காய் ஒன்று தலையில் விழுந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
புலத்கொஹுபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 2 times, 1 visits today)