ஸ்பெயினின் விடுமுறை ஹாட்ஸ்பாட்களை குத்தகைக்கு எடுத்துள்ள கரப்பான் பூச்சிகள் : மக்களுக்கு எச்சரிக்கை!

ஸ்பெயினின் விடுமுறை ஹாட்ஸ்பாட்கள் கரப்பான் பூச்சிக்களால் கடுமையான கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலா வருபவர்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய” மற்றும் “மிரட்டும்” கரப்பான் பூச்சிகள், பத்து சென்டிமீட்டர் வரை நீளம் கொண்டவை, சன்னி ஆண்டலூசியா, அஸ்டூரியாஸ் மற்றும் முர்சியா உள்ளிட்ட பல ஸ்பானிஷ் பகுதிகளில் இவை இனங்காணப்பட்டுள்ளன.
Nauphoeta cinera என்று பெயரிடப்பட்ட இவ்வகையான கரப்பான் பூச்சிகள் அதிக தூரம் பறக்கும் திறன் கொண்டவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு இந்த இனத்தின் மீது சிறிதளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றாலும் அதனை அழிக்க இயலாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
(Visited 15 times, 1 visits today)