பிரித்தானியாவில் வாகனம் ஒன்றை சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
கிழக்கு யார்க்ஷயர் கிராமத்தில் வேன் ஒன்றில் இருந்து 40 மில்லியன் பவுண்ட் பெறுமதியாக கொக்கைன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
40 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள அரை டன் கோகோயின் கிராமத்தில் உள்ள மதுபான விடுதியின் கார் நிறுத்துமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தேசிய குற்றவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிழக்கு யார்க்ஷயர், லெல்லியில் உள்ள ஸ்டாக்ஸ் ஹெட் இன் கார் நிறுத்துமிடத்தில் வேனில் இருந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் போதை பொருள் கடத்த பயன்படுத்தப்பட்ட படகு ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த மூவரும் கொலம்பியாவைச் சேர்ந்த ஒருவரும், ஏ வகுப்பு போதை பொருளை இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொண்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
“இது கணிசமான அளவு கோகோயின் மற்றும் அதை பிரித்தானியாவுக்குள் கடத்த முயன்ற குற்றக் குழுவிற்கு மிகப்பெரிய அடியாக இருக்கும் என NCA இன் மூத்த விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார.
இந்த கொக்கைன் பிரித்தானியாவை சுற்றியுள்ள சமூகங்களில் விற்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.