இலங்கை செய்தி

க்ளப் வசந்த கொலை வழக்கு – ரகசிய வாக்கு மூலம் வழங்கிய துலான்

கிளப் வசந்த என்ற சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பில் அதுரிகிரிய பச்சை குத்தும் நிறுவகத்தின் உரிமையாளர் கடுவெல நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சந்தேகநபர் துலான் சஞ்சய் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, நுவான் ஜயவர்தன, தனது கட்சிக்காரர் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கவுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தார்.

இதன்போது நீதிபதி, சந்தேகநபரிடம் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கும் போது நீதிமன்றில் உள்ள நிபந்தனைகள் குறித்து தெரிவித்ததுடன், அந்த நிபந்தனைகளின் அடிப்படையில் இரகசிய வாக்குமூலத்தை வழங்க சம்மதித்தால், பிற்பகல் இடைவேளையின் பின்னர் சந்தேகநபரின் இரகசிய வாக்குமூலத்தை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.

இதன்படி இன்று நீதிமன்ற மதிய உணவு இடைவேளையின் பின்னர் குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சந்தேகநபர் உரிய இரகசிய வாக்குமூலத்தை வழங்கினார்.

இதன்படி, துலான் சஞ்சய் உள்ளிட்ட 8 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை