காலநிலை மாற்றத்தால் கடந்த 50 ஆண்டுகளில் 2 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர் – ஐ.நா
கடந்த அரை நூற்றாண்டில் மோசமான வானிலையால் 2 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர் மற்றும் 4.3 டிரில்லியன் டாலர் பொருளாதார சேதம் ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை கண்டறிந்துள்ளது.
ஐநாவின் உலக வானிலை அமைப்பு (WMO) வெளியிடப்பட்ட புதிய புள்ளிவிவரங்களின்படி, 1970 முதல் 2021 வரை 11,778 வானிலை தொடர்பான பேரழிவுகள் நிகழ்ந்துள்ளன, மேலும் அவை அந்த காலகட்டத்தில் அதிகரித்துள்ளன.
இந்த பேரழிவுகளால் உலகம் முழுவதும் பதிவான இறப்புகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமான இறப்புகள் வளரும் நாடுகளில் நடந்ததாக அறிக்கை கண்டறிந்துள்ளது.
“மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் துரதிர்ஷ்டவசமாக வானிலை, தட்பவெப்பநிலை மற்றும் நீர் தொடர்பான ஆபத்துகளின் சுமையை தாங்குகின்றன” என்று WMO தலைவர் பெட்டேரி தாலாஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் மியான்மர் மற்றும் பங்களாதேஷில் பேரழிவை ஏற்படுத்திய மோச்சா சூறாவளி இந்த யதார்த்தத்தை எடுத்துக்காட்டுகிறது என்று தலாஸ் கூறினார்.