சத்தீஸ்கரில் பாடசாலை அதிபர் பாலியல் வன்கொடுமை செய்ததால் 9ம் வகுப்பு மாணவி தற்கொலை
சத்தீஸ்கரின்(Chhattisgarh) ஜாஷ்பூர்(Jashpur) மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பாடசாலையின் 15 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி பாடசாலை விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவ இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலைக் குறிப்பில் அதிபர் கெட்ட தொடுதல், பாலியல் வன்கொடுமை மற்றும் துஷ்பிரயோகம் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்ததை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், அதிபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, பிரேத பரிசோதனைக்குப் பிறகு, மாணவியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




