தாய்லாந்து – கம்போடியா எல்லையில் மோதல் – ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் மோதல் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு நாடுகளின் படைகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.
தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்ததின்படி, எல்லைச் சுருங்கிய பகுதிகளில் நிலவும் பதற்றம் காரணமாக, அப்பகுதியில் உள்ள 86 கிராமங்களில் வசிக்கும் 40,000க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பாக இடம்பெயர்த்தனர்.
இந்த மோதல்கள், கடந்த சில வாரங்களாக இரண்டு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வந்த முறுகல் நிலையின் தொடர்ச்சியாகவே நிகழ்ந்துள்ளன. தாய்லாந்து மற்றும் கம்போடியா படைகள் எல்லையின் ஆறு பகுதிகளில் மோதல்களில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மோதல்களின் தொடக்கத்திற்கான பொறுப்பை இரு தரப்பும் ஒருவர்மீது ஒருவர் சுமத்தி வருகின்றனர். தாய்லாந்தின் தலைநகரமான பாங்காக்கில் இருந்து சுமார் 250 மைல் தொலைவில் அமைந்துள்ள பழமையான நகரமான “பிரசாத் டா மோன் தொம்” பகுதியில் மோதல் ஆரம்பமானது எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கம்போடிய இராணுவத்தின் மீது தாய்லாந்து F-16 போர் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.