பலுசிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே மோதல் – 88 பேர் மரணம்
தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தான்(Balochistan) முழுவதும் பல நகரங்களில் பாகிஸ்தானின் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 67 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த தாக்குதல்களில் 10 காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரும் 11 பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.
பலுசிஸ்தான் மாகாணம் முழுவதும் 12 வெவ்வேறு இடங்களில் தீவிரவாதிகள் இந்த ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், தாக்குதல்களைக் கண்டித்த பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி(Mohsin Naqvi) ஒரு அறிக்கையில் பாதுகாப்புப் படையினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
ஈரான்(Afghanistan) மற்றும் ஆப்கானிஸ்தானின்(Afghanistan) எல்லையைக் கொண்ட பலுசிஸ்தானில் தனித்தனியான தாக்குதல்களில் 41 போராளிகளைக் கொன்றதாக பாகிஸ்தான் இராணுவம் கூறிய ஒரு நாளுக்குப் பிறகு இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.





