வட அமெரிக்கா

வங்கதேச படைகளுக்கும் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்: 4 பேர் உயிரிழப்பு, 50க்கும் மேற்பட்டோர் காயம்

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக அவர் தனது பதவியை இழந்து, அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைப்பு சார்பில், நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாணவர்கள் பலர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

வங்கதேசத்தின் அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய இந்த நிகழ்வு ஓராண்டை நிறைவு செய்ய உள்ளதை முன்னிட்டு, மாணவர்களின் அரசியல் கட்சியான தேசிய குடிமக்கள் கட்சி சார்பில் இந்த மாதத்தில்( ஜூலை ) நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இன்று கோபால்கஞ்ச் நகரில் பேரணி நடத்தப்பட்டது.

ஷேக் ஹசீனாவின் மூதாதையர்கள் வாழ்ந்த நகரமான இது, அவாமி லீக் கட்சியின் கோட்டையாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை பலத்த பாதுகாப்புடன் பேரணி தொடங்கியது. அப்போது, அவாமி லீக் கட்சியினர், வன்முறையில் ஈடுபட்டனர். பல்வேறு வாகனங்களுக்குத் தீ வைத்த அவர்கள், போலீஸார் மீது தாக்குதல்களை நடத்தினர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

வன்முறையை அடுத்து, மாணவர் தலைவர்கள் காவல் நிலையங்களுக்குள் தஞ்சம் புகுந்தனர். பலர், போலீஸ் பாதுகாப்புடன் அண்டை மாவட்டங்களுக்கு விரைந்தனர்.

கோபால் கஞ்ச் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து தற்போது அங்கு கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

இதனிடையே, வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாணவர் தலைவர் நஷீத் இஸ்லாம் வலியுறுத்தியுள்ளார். மேலும், அண்டை மாவட்டமான பரித்பூரில் அடுத்த பேரணி நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

முகம்மது யூனுஸ் பதவியேற்றதில் இருந்து வங்கதேசத்தில் தொடர் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மை இந்துக்களுக்கு எதிராக நடந்த வன்முறைச் சம்பவங்களால், அந்நாடு சர்வதேச அளவில் கடும் விமர்சனங்களைச் சந்தித்தது. சட்டம் ஒழுங்கு நிலைமை மோசடைந்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த யூனுஸ் அரசு தவறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாட்டில் நல்லிணக்கம் குறைந்து வருவதாகவும், மக்களிடையே பிளவு அதிகரித்து வருவதாகவும் கூறும் யூனுஸ் எதிர்ப்பாளர்கள், நிலைமை மேம்படவில்லை என்றால் ஜனநாயகம் ஆபத்துக்குள்ளாகும் என எச்சரித்துள்ளனர்.

(Visited 2 times, 2 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
Skip to content