தமிழ்நாடு

திருமண மண்டபத்தில் வெடித்த மோதல் ;மணமகளை தோளில் தூக்கி கொண்டு ஓடிய மணமகன்

தமிழகத்தின் நாகர்கோவிலில் மயங்கி விழுந்த மணப்பெண்ணை மணமகன் தோளில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

தமிழகத்தின் நாகர்கோவில் மாவட்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்ற திருமண விருந்து உபசரிப்பு விழாவில் மணமகன் வீட்டாருக்கும் மணமகள் வீட்டாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.மணமகளின் உறவினர் சிலர் மது போதையில் திருமண மண்டபத்தில் குத்தாட்டம் போட்டதுடன் அங்கு நின்று கொண்டு இருந்த மணமகனின் உறவுக்கார பெண்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து எழுந்த வாக்குவாதத்தில் இருவீட்டார் இடையிலும் மோதல் வெடித்தது, அத்துடன் திருமண மண்டபத்தில் இருந்த கண்ணாடிகள் மற்றும் பிளாஸ்டிக் நாற்காலிகளை மோதலில் இரு வீட்டாரும் அடித்து உடைத்தனர்.இந்நிலையில் இரு வீட்டாருக்கும் இடையே நடைபெற்ற சண்டையை வேடிக்கை பார்த்த மணமகள் அதிர்ச்சியில் திடீரென மேடையில் மயங்கி விழுந்தார்.

இதைப்பார்த்த மணமகன் உடனடியாக மணமகளை தோளில் தூக்கி கொண்டு மருத்துவமனையை நோக்கி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனை தொடர்ந்து திருமண மண்டபத்திற்கு வந்த பொலிஸார் மோதல் சம்பவம் குறித்து இருவீட்டாரிடம் விசாரணை நடத்தினர்.

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்