இலங்கை

திருமலையில் இரு குழுக்களிடையே மோதல்;பெண்ணொருவர் உட்பட அறுவர் வைத்தியசாலையில் அனுமதி

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக பெண்ணொருவர் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் (24) இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் 28 தொடக்கம் 58 வயதுக்கு இடைப்பட்ட நபர்களே காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, மிரிஸ்வெவ பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த சேனைப்பயிர்ச் செய்கைக்குள் மாடுகள் புகுந்து நாசமாக்கியுள்ளதாக சேனைப்பயிர் செய்கையாளர் மாட்டின் உரிமையாளரிடம் நட்டியீடு கோரியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் பெண் ஒருவர் உட்பட ஆறுபேர் காயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பெண் ஒருவருடன் வயோதிபர் ஒருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content