ஜேர்மனியில் கலாச்சார நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதல்: பொலிஸார் 26 பேருக்கு காயம்
ஜேர்மனியில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில், இருதரப்பினருக்கிடையே மோதல் வெடித்தது.
ஜேர்மனியின் Stuttgart நகரில், எரித்ரியா நாட்டின் ஜனாதிபதியான Isaias Afwerkiயின் ஆதரவாளர்கள் கலாச்சார நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
சனிக்கிழமையன்று நடைபெற்ற அந்த நிகழ்ச்சியின்போது, எரித்ரியா நாட்டின் ஜனாதிபதியான Isaias Afwerkiயின் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே மோதல் வெடித்தது.
அதைக்தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் ஜேர்மன் பொலிஸ் அதிகாரிகள் 26 பேர் வரை காயமடைந்தனர். பொலிசார் மீது பேஸ்பால் மட்டைகள், கம்பிகள், ஆணிகள் மற்றும் போத்தல்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை ஜேர்மன் உள்துறை அமைச்சரான Nancy Faeser வன்மையாக கண்டித்துள்ளார். வெளிநாட்டு மோதல்கள் நம் நாட்டில் நடத்தப்படக்கூடாது என்று கூறியுள்ளார் அவர்.இந்த சம்பவம் தொடர்பாக, எரித்ரிய ஜனாதிபதியின் எதிர்ப்பாளர்கள் 200க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.