ஜெர்மனியில் 300 பேருக்கு பிரஜாவுரிமை – பணத்திற்காக பெண் செய்த செயல்
ஜெர்மனியில் பிரஜாவுரிமை பெற்ற சம்பவத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பெண் ஒருவர் ஜெர்மனி நாட்டின் பிரஜா உரிமையை பணத்துக்காக விற்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஜெர்மனியில் ஒஸ்லா புல்க் நகரத்தில் உள்ள வெளிநாட்டவர் காரியாலத்தில் கடமையாற்றுகின்ற பெண் அதிகாரி ஒருவர் பணத்திற்கு ஜெர்மன் நாட்டு பிரஜா உரிமையை விற்றுள்ளார் என்று அவர் மீது குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது.
அதாவது 33 வயதுடைய இந்த பெண் அதிகாரியானவர் கடந்த ஜனவரி மாதம் 2022 ஆம் ஆண்டு கிலைஸ் ஒஸ்லாம் புறுக்ஸ் என்று சொல்லப்படுகின்ற பிரதேசத்தின் வெளிநாட்டு காரியாலத்தில் அதிகாரியாக வேலை செய்ததாகவும், இந்நிலையில் இவர் 300 பேருக்கு எவ்விதமான சோதனைகளையும் மேற்கொள்ளாமல் அவர்களுக்கு பிரஜா உரிமையை வழங்கினார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வழமையாக எவர் ஒருவர் பிரஜா உரிமையை பெறும் பொழுது அவர்களுடைய நடவடிக்கைகள் பற்றி அலுவலக அதிகாரியானவர் விசாரணையை நடத்த வேண்டும் என்பது கடப்பாடாகும்.