தற்செயலாக வாடிக்கையாளர் கணக்கில் $378-க்கு பதிலாக $109 டிரில்லியனை வைப்பிலிட்ட சிட்டிகுரூப்

சிட்டி குழுமம் சென்ற ஆண்டு (2024) ஏப்ரலில் வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கில் தவறுதலாகப் பெருந்தொகையை நிரப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளருக்கு 280 அமெரிக்க டொலர் (S$378) நிரப்புவதற்குப் பதிலாக 81 டிரில்லியன் அமெரிக்க டொலர் (S$109 டிரில்லியன்) பணம் போடப்பட்டதாக ‘ஃபைனான்ஷியல் டைம்ஸ்’ தகவல் வெளியிட்டுள்ளது.
ஊழியர்கள் இருவர் அந்தப் பிழையைக் கண்டுபிடிக்கத் தவறிவிட்டதாகவும் மூன்றாமவர் 90 நிமிடங்கள் கழித்து அதைக் கண்டுபிடித்ததாகவும் கூறப்பட்டது.
வங்கியின் கையிருப்பு முழுவதுமாகத் தீர்ந்துபோனதாகவும் நல்லவேளையாக இழப்பு ஏதுமின்றிப் பணம் மீட்கப்பட்டதாகவும் இதுகுறித்து அமெரிக்க மத்திய வங்கிக்கும் நாணயக் கட்டுப்பாட்டு அமைப்புக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் ‘ஃபைனான்ஷியல் டைம்ஸ்’ கூறியது.
இச்சம்பவத்தால் வங்கிக்கோ சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கோ பாதிப்பு ஏதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
சிட்டி வங்கியில் சென்ற ஆண்டு இத்தகைய பத்து சம்பவங்கள் இடம்பெற்றன என்றும் அவை ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் தொடர்புடையவை என்றும் கூறப்பட்டது.