பிரேசிலில் சரிந்து விழுந்த கிறிஸ்மஸ் மரம் : ஒருவர் பலி!
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ அருகே உள்ள ஒரு தடாகத்தில் கட்டப்பட்ட 184 அடி கிறிஸ்மஸ் மரம் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளார்.
புயலின் காரணமாக குறித்த மரம் சரிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதில் 21 வயதான இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
கட்டிடம் இடிந்து விழுவதற்கு முன்னதாக வானிலை ஆய்வாளர்கள் வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக அறிவித்துள்ளனர்.





