ஜெர்மனியில் கோலாகலமாக ஆரம்பமாகிய கிறிஸ்துமஸ் சந்தை!
ஜெர்மனியின் பாரம்பரிய கிறிஸ்துமஸ் சந்தைகள் இன்று அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டன.
இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கூடுதல் பயங்கரவாத எதிர்ப்புத் தடைகள் மற்றும் தனியார் பாதுகாப்பு உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் கூடுதல் கரிசனையுடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ் சந்தைகள் என்பது இடைக்காலம் முதல் ஜெர்மனியர்கள் போற்றி வரும் ஒரு வருடாந்திர பாரம்பரியமாகும்.
ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு மாக்ட்பர்க் நகரில் (Magdeburg) கிறிஸ்துமஸ் சந்தையின்போது இடம்பெற்ற தாக்குதலில் ஐந்துபேர் உயிரிழந்தனர்.
இதன்காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் அதிகளவு கரிசனை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.





