புனித நகரமான பெத்லகேமில் நிறுத்தப்பட்ட நத்தார் கொண்டாட்டங்கள்
கத்தோலிக்க மக்களின் மிகவும் புனிதமான நகரமான பெத்லகேமில் இந்த ஆண்டு நத்தார் பண்டிகை கொண்டாட்டங்கள் நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பெத்லகேம் ஒரு பாலஸ்தீனிய நகரமாக ஆளப்படுவதே இதற்குக் காரணம்.
நகரில் பாரம்பரியமாக நத்தார் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டாலும், காஸா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆண்டு நத்தார் கொண்டாட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சமீபகால வரலாற்றில் பெத்லகேம் நகரில் நத்தார் பண்டிகை கொண்டாடப்படாமல் இருப்பது இதுவே முதல் முறையாகும்.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில், பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் கலந்து கொள்ளும் முக்கிய ஆராதனை நடைபெறவுள்ளது
(Visited 7 times, 1 visits today)