காதல் உணர்வை அதிகரிக்கும் சொக்லெட்
பிப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்கான கொண்டாட்டங்கள் பிப்ரவரி 7 ஆம் திகதியே தொடங்கும் நிலையில், மூன்றாம் நாளாக சொக்லெட் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், உங்கள் அன்பு பிரியருக்கு நீங்கள் பரிசளிக்கும் சொக்லெட்டில் உள்ள நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.
சொக்லெட் ‘ட்ரைப்டோஃபன் ’என்கிற மூலப்பொருளை அதிகமாக கொண்டிருக்கிறது. அது நம் உடலில் உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடிய செரோடின் அமிலத்தை சுரக்கச் செய்கிறது.
அதேபோல் கஃபைன் என்கிற மூலப்பொருளும் அதில் இருக்கிறது. இது மெல்லிய உணர்வை அதாவது ரொமாண்டிக் மூடை தூண்டுகிறது.
அதனால்தான் காதலர் தினத்தில் சாக்லெட்டை பரிமாறிக் கொள்கின்றனர். நீங்களும் உங்கள் காதலியிடமிருந்து ஒரு முத்தம் வேண்டுமெனில் பெரிய சொக்லெட்டை வாங்கிக் கொடுங்கள்.
உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் ஆற்றல் சொக்லெட்டில் இருக்கிறது. இதை ‘ஜர்னல் ஆஃப் நியூட்ரீஷியன்’ அமைப்பு ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளது.
சொக்லெட் உண்பதால் மூலையின் செயல்பாடுகள் கூர்மையாகின்றன. ஹார்வர்ட் ஆராய்ச்சியில் தினம் இரண்டு டம்ளர் சூடான சொக்லெட் ஷேக் உண்பதால் மூளையின் செயல் ஆற்றல், நினைவாற்றல் , அறிவாற்றல் போன்றவை அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
சொக்லெட் உண்பதால் இதயம் தொடர்பான பிரச்னைகள் வராது என பி.எம்.ஜே. நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளது.
தினமும் 100 கிராம் சொக்லெட்டை சாப்பிட்டு வந்தால் பக்கவாதம் வராது என ஜர்னல் ஹார்ட் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. கனாவில் நிகழ்த்திய ஆய்வில் சாக்லெட் உட்கொள்வதால் பக்கவாதம் இருப்போருக்கு 22 சதவீதம் குறைய வாய்ப்பு என தெரிவித்துள்ளது.
இத்தனை நன்மைகளா ? என அதிகமாக சொக்லெட்டுகளை உண்டாலும் அது ஆபத்தானதே. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது அனைவருக்கும் தெரியும். எனவே அளவாக உண்ணுங்கள் ; ஆரோக்கியமாக வாழுங்கள்.