அடுத்த வாரம் ஹாலோவீனுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் சாக்லேட் விலை கணிசமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கோகோ விலை இந்த வாரம் 44 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியதே இதற்குக் காரணம்.
இதன் தாக்கம் கிறிஸ்மஸ் காலத்தை விட அடுத்த வருடம் ஈஸ்டர் சீசனில் அதிகமாக உணரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எல் நினோ பருவநிலை மாற்றத்தால் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கோகோ அறுவடை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதே விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.
சமீபத்தில், ஆஸ்திரேலியாவில் சாக்லேட் தொழிலில் ஈடுபட்டுள்ள ஏராளமான தொழிலாளர்கள் வேறு துறைகளில் பணிபுரியச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.